0

30 Recepies in Tamil with Ginger and Garlic

30 days 30 Recepies in Tamil with Ginger and Garlic"என்னவோ தெரியல... பசியே எடுக்க மாட்டேங்குது" - என்றதுமே... "இதை சுடச்சுட சாதத்துல போட்டுச் சாப்பிடு சரியாயிடும்" என்றபடியே அம்மா அரைத்துக் கொடுக்கும் இஞ்சித் துவையல், அடுத்த சில மணி நேரங்களில் 'கபகப'வென பசிக்க வைத்துவிடும்.

''கை, காலெல்லாம் பிடிச்சிக்கிட்ட மாதிரி இருக்கு..." - இப்படிச் சொன்ன அடுத்த நிமிடமே... "வேற ஒண்ணுமில்ல... வாயு பிடிப்பா இருக்கும். இந்தா... இதைச் சாப்பிடு!" என்றபடி உங்கள் பாட்டி, பூண்டு களை லேசாக எண்ணெயில் வதக்கிக் கொடுக்க... சாப்பிட்ட சில மணி நேரங்களிலேயே 'பிடிப்பு' போயிருக்கும்!

இஞ்சி... கர்ப்பிணிகளின் அதிகப்படியான வாந்தியைக் கட்டுப்படுத்தும். பெண்களின் மாதாந்திர வயிற்று வலியைக் குறைக்கும்.

பூண்டு... சிறுநீரில் புரோட்டீன் அளவு அதிகரிப்பதால் கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் பிளட் பிரஷரைத் தடுக்கும்; இதயத்தைக் காக்கும், கேன்சர் அபாயத்தைக் குறைக்கும்.

உணவாக உள்ளே போய்... மருந்தாக மாறி இப்படி குணமளிப்பதில் இஞ்சி மற்றும் பூண்டுக்கு இணை... அவையேதான்! அத்தகைய மகத்துவம் வாய்ந்த இஞ்சி மற்றும் பூண்டு ஆகியவற்றில் அசத்தல் ரெசிபிகளை அள்ளித் தருகிறார் கிருஷ்ணகுமாரி.

பின்குறிப்பு: இவற்றை அவ்வப்போது உணவில் சேர்த்தால், உடல் சிக்கென இருக்கும். பிறகென்ன... 'இஞ்சி இடுப்பழகி... பூண்டு பல்லழகி...’ என்று உங்களவர் ரொமான்ஸடிப்பார்... என்ஜாய்!

ஜிஞ்சர் சிரப்!

தேவையானவை: துருவிய இஞ்சி, சர்க்கரை - தலா ஒரு கப், தண்ணீர் - 3 கப், எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், சோடா - ஒரு கப்.

30 days 30 Recepies in Tamil with Ginger and Garlic

செய்முறை: துருவிய இஞ்சியுடன் 3 கப் தண்ணீர் சேர்த்து வேக விடவும். அதில் சர்க்கரை சேர்த்து நன்கு கொதிக்க விடவும். கொதிக்க ஆரம்பித்தவுடன் 5 நிமிடம் அடுப்பை 'சிம்’மில் வைத்து, இறக்கி ஆற விடவும். அதனை அரை மணி நேரம் கழித்து வடிகட்டி, சுத்தமான பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைக்க... ஜிஞ்சர் சிரப் ரெடி!

தேவைப்படும்போது 2 டேபிள்ஸ்பூன் சிரப், அரை டம்ளர் சோடா, அரை டம்ளர் தண்ணீர், ஒரு டேபிள்ஸ்பூன் எலுமிச்சைச் சாறு சேர்த்து, நன்கு கலந்து பரிமாறவும்.

பூண்டு சாதம்

தேவையானவை: வடித்த சாதம் - ஒரு கப், பூண்டுப் பல் - 10, வெங்காயம் - 1 (நறுக்கிக் கொள்ளவும்), பச்சை மிளகாய் - 2 அல்லது 3 (நீளவாக்கில் கீறியது), சீரகம் - கால் டீஸ்பூன். கறிவேப்பிலை - சிறிதளவு, நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

30 days 30 Recepies in Tamil with Ginger and Garlic

செய்முறை: சாதத்தை உதிராக வடித்துக் கொள்ளவும். பூண்டை விழுதாக அரைக்கவும். கடாயில் நெய் விட்டு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து, வெங்காயம், கீறிய பச்சை மிளகாய், அரைத்த பூண்டு விழுது, உப்பு சேர்த்துக் கிளறவும். வதங்கியவுடன், சாதத்தை போட்டுக் கிளறவும். ஒரு நிமிடம் கழித்து இறக்கி, தயிர்ப் பச்சடி அல்லது அப்பளத்துடன் பரிமாறவும்.


ஜிஞ்சர் சூப்

தேவையானவை: துருவிய இஞ்சி - கால் கப், துருவிய கேரட், முட்டைகோஸ் (கலந்தது) - அரை கப், சோள மாவு - ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள், சீரகத்தூள் - தலா அரை டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு,

30 days 30 Recepies in Tamil with Ginger and Garlic

செய்முறை: குக்கரில் எண்ணெய் விட்டு, இஞ்சி, துருவிய கேரட், முட்டைகோஸ் சேர்த்து நன்கு வதக்கி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். ஒரு விசில் வந்ததும் இறக்கி, ஆற விடவும். சோள மாவை தண்ணீரில் கரைத்து அதில் கலக்கவும். பிறகு, மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்துக் கலக்கி, ஒரு கொதி விட்டு இறக்கி, பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் தூவி பரிமாறவும்.

பூண்டு ரொட்டி

தேவையானவை: கோதுமை மாவு - ஒரு கப், அரைத்த பூண்டு விழுது - 5 டேபிள்ஸ்பூன், கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், மிளகுத்தூள் - கால் டீஸ்பூன், வெண்ணெய் - அரை டீஸ்பூன், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன். உப்பு - தேவையான அளவு.

30 days 30 Recepies in Tamil with Ginger and Garlic

செய்முறை: கோதுமை மாவுடன் உப்பு, வெண்ணெய் சேர்த்துப் பிசறி, தேவையான தண்ணீர் விட்டு, சப்பாத்தி மாவு பதத்தில் பிசையவும். கடாயில் நெய் விட்டு, பூண்டு விழுது, மிளகுத்தூள், உப்பு, கரம் மசாலாத்தூள் சேர்த்து சுருள வதக்கினால், பூரணம் ரெடி!

மாவை சப்பாத்தியாக தேய்த்து, அதன் மீது பூரணத்தைப் பரப்பி, மேலே இன்னொரு சப்பாத்தியை வைத்துத் தேய்க்கவும். இந்த சப்பாத்தியை சூடான தவாவில் போட்டு, இருபுறமும் நெய் விட்டு சுட்டு எடுக்கவும்.

ஜிஞ்சர் ரைஸ்

தேவையானவை: சாதம் - ஒரு கப், வெங்காயம் - 1, இஞ்சி - 4 அங்குலத்துண்டு ஒன்று, தக்காளி சாஸ், சோயா சாஸ் - தலா 1 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

30 days 30 Recepies in Tamil with Ginger and Garlic

செய்முறை: சாதம் வடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயம், துருவிய இஞ்சி, கீறிய பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். அதில் உப்பு, தக்காளி சாஸ், சோயா சாஸ் சேர்த்துக் கிளறவும். வடித்த சாதத்தைப் போட்டு நன்கு கலக்கி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

பூண்டு- தேங்காய் சட்னி

தேவையானவை: உரித்த பூண்டு, தேங்காய் துருவல் - தலா கால் கப், மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

30 days 30 Recepies in Tamil with Ginger and Garlic

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, உரித்த பூண்டு, தேங்காய் துருவலை நன்கு வறுக்கவும். இதனுடன் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். பூண்டு - தேங்காய் சட்னி ரெடி!

இது மும்பை ஸ்பெஷல் வடாபாவ் சட்னி.


ஜிஞ்சர் யோகர்ட் வித் ஃப்ரூட்

தேவையானவை: தயிர் - ஒரு கப், வாழைப்பழம் - 1 (சிறு துண்டுகளாக்கவும்), நறுக்கிய பப்பாளி - 10 துண்டுகள், திராட்சை - 20, இஞ்சித் துருவல் - 3 டேபிள்ஸ்பூன், பாதாம்பருப்பு - 10, சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன்.

30 days 30 Recepies in Tamil with Ginger and Garlic

செய்முறை: தயிருடன் வாழைப்பழம், பப்பாளி, திராட்சை, இஞ்சித் துருவல், சர்க்கரையை சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவும். ஒரு மணி நேரம் முன்பு ஊற வைத்த பாதாம்பருப்பைத் தோல் நீக்கி, துருவி அதில் சேர்க்கவும். பிறகு குளிர வைத்துப் பரிமாறவும்.

பூண்டு சட்னி

தேவையானவை: உரித்த பூண்டு - கால் கப், காய்ந்த மிளகாய் - 7, புளி - ஒரு சிறு நெல்லிக்காய் அளவு, கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு - தாலா கால் டீஸ்பூன், பெருங்காயம், உப்பு, நல்லண்ணெய் - தேவையான அளவு.

30 days 30 Recepies in Tamil with Ginger and Garlic

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, பூண்டு, காய்ந்த மிளகாய், புளி, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து வதக்கி, மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும். இன்னொரு கடாயில் நல்லெண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் தாளித்து, சட்னியில் சேர்த்துக் கலக்கவும்.

இஞ்சிப் பச்சடி

தேவையானவை: இஞ்சி - 50 கிராம், தேங்காய் துருவல் - ஒரு கப், பச்சை மிளகாய் - 2, சீரகம் - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, தயிர் - ஒரு கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

30 days 30 Recepies in Tamil with Ginger and Garlic

செய்முறை: சுத்தம் செய்த இஞ்சி, தேங்காய் துருவல், பச்சை மிளகாயை மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளவும், அதில் உப்பு சேர்த்து தயிருடன் கலக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து, கறிவேப்பிலை சேர்த்து, தயிர் கலவையுடன் கலக்கிப் பரிமாறவும்.

பூண்டு வெஜ் ரைஸ்

தேவையானவை: சாதம் - ஒரு கப், பச்சை மிளகாய் - 6, பூண்டுப் பல் - 6, நறுக்கிய கேரட், பீன்ஸ், பட்டாணி (கலந்தது) - ஒரு கப் , வெங்காயம் - 1 (நறுக்கிக் கொள்ளவும்), பட்டை, கிராம்பு, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

30 days 30 Recepies in Tamil with Ginger and Garlic

செய்முறை: சாதத்தை உதிராக வடித்துக் கொள்ளவும். பச்சை மிளகாய், பூண்டு இரண்டையும் விழுதாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, பட்டை, கிராம்பு, ஏலக்கய்த்தூள் தாளித்து, நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். இதனுடன் காய்கறிகளைச் சேர்த்து, உப்பு போட்டு வேக விடவும். வெந்தவுடன், அதில் சாதத்தை சேர்த்துக் கிளறி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

இஞ்சித் தீயல்

தேவையானவை: பொடியாக நறுக்கிய இஞ்சி, தேங்காய் துருவல் - தலா ஒரு கப், சின்ன வெங்காயம் - 10, பச்சை மிளகாய் - 2, மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், வெந்தயத்தூள் - தலா கால் டீஸ்பூன், புளி - ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு, வெல்லம் - சிறிய துண்டு, நல்லெண்ணெய் - அரை கப், கடுகு, உளுத்தம்பருப்பு - கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

30 days 30 Recepies in Tamil with Ginger and Garlic

செய்முறை: கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு இஞ்சி, தேங்காய் துருவலை வதக்கி. கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். புளியைக் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். கடாயில் மீதி எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் தாளித்து, வட்டமாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். இதனுடன் மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், வெந்தயத்தூள் சேர்க்கவும். அதில் புளிக் கரைசல், உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். பின்பு அரைத்த இஞ்சி - தேங்காய் விழுதை சேர்த்து, நன்கு சுருள கிளறவும். எண்ணெய் பிரிந்து வரும்போது பொடித்த வெல்லம் சேர்த்து, கிளறி இறக்கவும். ஒரு மாதம் வரை கெடாமல் வைத்து உபயோகிக்கலாம்.

சாதத்தில் போட்டுச் சாப்பிட சுவையாக இருக்கும்.

பூண்டு ஊறுகாய்

தேவையானவை: உரித்த பூண்டு - ஒரு கப், எலுமிச்சைச் சாறு - கால் கப், தனியா, வெந்தயம் - தலா 2 டேபிள்ஸ்பூன், சீரகம் - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் - 3 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன், நல்லெண்ணெய் - அரை கப், உப்பு - தேவையான அளவு.

30 days 30 Recepies in Tamil with Ginger and Garlic

செய்முறை: வெறும் கடாயில் வெந்தயம், தனியா, சீரகத்தை வறுத்துப் பொடிக்கவும். கடாயில் கால் கப் எண்ணெய் விட்டு, உரித்த பூண்டைப் போட்டு நன்கு வதக்கவும். பூண்டு வதங்கியவுடன், மஞ்சள்தூள், உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்துக் கிளறவும். அதனுடன் எலுமிச்சைச் சாறு, பொடித்த தூளை சேர்க்கவும். மீதமுள்ள கால் கப் எண்ணெயைச் சேர்த்து, சுருள வதக்கி, ஆறியவுடன் சுத்தமான பாட்டிலில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

இஞ்சி சட்னி

தேவையானவை: இஞ்சி - 10 கிராம், காய்ந்த மிளகாய் - 8, புளி - பெரிய நெல்லிக்காய் அளவு, நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

30 days 30 Recepies in Tamil with Ginger and Garlic

செய்முறை: நறுக்கிய இஞ்சி, காய்ந்த மிளகாயை வெறும் கடாயில் வறுத்துக் கொள்ளவும். இதனுடன் உப்பு, புளி சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைக்கவும். கடாயில் நல்லெண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து கறிவேப்பிலை சேர்த்து சட்னியுடன் கலக்கவும். விருப்பப்பட்டால் சிறிது வெல்லம் சேர்க்கலாம். இது இட்லி, தோசை, வடை, பஜ்ஜிக்கு சுவையான ஜோடி!

இஞ்சி ரசம்

தேவையானவை: இஞ்சி - 3 அங்குலத் துண்டு, பச்சை மிளகாய் - 2, எலுமிச்சம்பழம் - 1, வேக வைத்த துவரம்பருப்பு - கால் கப், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா ஒரு சிட்டிகை, மிளகுத்தூள், சீரகத்தூள் - கால் டீஸ்பூன், கடுகு-கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

30 days 30 Recepies in Tamil with Ginger and Garlic

செய்முறை: பாத்திரத்தில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி, கீறிய பச்சை மிளகாய், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், நசுக்கிய இஞ்சி சேர்த்து கொதிக்க விடவும். ஒரு டம்ளர் அளவுக்கு வற்றியவுடன், அதில் வேக வைத்த துவரம்பருப்பை நீர்க்க கரைத்து சேர்த்து, உப்பு போட்டுக் கொதிக்க விடவும். பொங்கி வரும்போது மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் சேர்க்கவும். மீண்டும் பொங்கியதும், இறக்கி எலுமிச்சம்பழம் பிழியவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும். கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

சளி, இருமல், அஜீரணம், பசியின்மை போன்ற குறைபாடுகளை போக்கும் இந்த ரசம்.

பூண்டு-இஞ்சி சூப்

தேவையானவை: பூண்டுப் பல் - 10, இஞ்சி - ஒரு அங்குலம் நீளமுள்ள துண்டு, வெங்காயம் - 1, நெய், சோள மாவு - தலா ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள், சீரகத்தூள் - தலா கால் டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, நறுக்கிய வெங்காயத்தாள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

30 days 30 Recepies in Tamil with Ginger and Garlic

செய்முறை: கடாயில் நெய் விட்டு, பூண்டு, நறுக்கிய இஞ்சி, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் 2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். 10 நிமிடம் கழித்து அதனை இறக்கி, ஆற வைத்து. வடிகட்டவும்.

பூண்டு, இஞ்சி, வெங்காயத்தை மிக்ஸியில் அரைக்கவும். வடிகட்டிய தண்ணீருடன் மேலும் 2 கப் தண்ணீர் ஊற்றி, அரைத்த விழுதுடன் சேர்க்கவும். சோள மாவைக் கரைத்து அதில் சேர்த்துக் கொதிக்க விடவும். மஞ்சள்தூள், மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து மேலும் கொதிக்க விடவும். பிறகு இறக்கி, நறுக்கிய வெங்காயத்தாள் தூவி பரிமாறவும்.

பூண்டு ரசம்

தேவையானவை: பூண்டுப் பல் - 6, புளி - ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, ரசப்பொடி- கால் டீஸ்பூன், மிளகுத்தூள், சீரகத்தூள் - தலா அரை டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்த மல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

30 days 30 Recepies in Tamil with Ginger and Garlic

செய்முறை: புளியைக் கரைத்து வடிகட்டவும். கடாயில் புளிக் கரைசல், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், ரசப்பொடி, உப்பு சேர்த்து சூடாக்கவும். பூண்டைத் தட்டி, அதில் சேர்க்கவும். கொதிக்க ஆரம்பித்தவுடன் மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து அடுப்பை 'சிம்’மில் வைத்து கொதிக்க விடவும். ரசம் நுரைத்து வரும்போது கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவவும். இன் னொரு கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்புதாளித்து, ரசத்தில் கொட்டி இறக்கவும்

இஞ்சிக் குழம்பு

தேவையானவை: இஞ்சி - 3 அங்குலத் துண்டு, சின்ன வெங்காயம் - 20, புளி - ஒரு எலுமிச்சம்பழம் அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், வெந்தயம் - தலா கால் டீஸ்பூன், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா ஒரு சிட்டிகை, மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன், தனியாத்தூள் - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, நல்லெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

30 days 30 Recepies in Tamil with Ginger and Garlic

செய்முறை: புளியைக் கரைத்துக் கொள்ளவும். இஞ்சியைக் கழுவி, சிறிய துண்டுகளாக நறுக்கவும். சின்ன வெங்காயத்தை இரண்டிரண்டாக நறுக்கவும். கடாயில் நல்லெண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், சீரகம், கறிவேப்பிலை தாளித்து இஞ்சி, வெங்காயம் சேர்த்து வதக்கவும். வதங்கியவுடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், பெருங்காயத்தூள் சேர்க்கவும். அதில் புளிக் கரைசல், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். கெட்டியாக வரும்போது ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு இறக்கவும்.

இந்தக் குழம்பு, சூடான சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

பூண்டுக் குழம்பு

தேவையானவை: உரித்த பூண்டு - கால் கப், புளி - ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு, மிளகாய்த்தூள் - ஒன்றரை டேபிள்ஸ்பூன், தனியாத்தூள் - 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா ஒரு சிட்டிகை, கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம் - தலா கால் டீஸ்பூன், சின்ன வெங்காயம் - 5, கறிவேப்பிலை - சிறிதளவு, நல்லெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன். உப்பு - தேவையான அளவு.

30 days 30 Recepies in Tamil with Ginger and Garlic

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து, பூண்டை சேர்த்து வதக்கவும். இதனுடன் நறுக்கிய சின்ன வெங்காயம், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்துக் கிளறவும். பிறகு மிளகாய்த்தூள், தனியாத்தூள் சேர்க்கவும். புளியைக் கரைத்து அதில் ஊற்றி, உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். குழம்பு நன்கு கொதித்து, எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கி விடவும். விருப்பப்பட்டால் சிறிதளவு வெல்லம் சேர்க்கலாம்.

இஞ்சி டீ

தேவையானவை: இஞ்சி - சிறிய துண்டு, டீத்தூள் - 2 டீஸ்பூன், தேன் - 2 டீஸ்பூன், தண்ணீர் - 2 கப்.

30 days 30 Recepies in Tamil with Ginger and Garlic

செய்முறை: 2 கப் தண்ணீரில் இஞ்சியைத் தட்டிப் போட்டு கொதிக்க விடவும். கொஞ்சம் வற்றியவுடன், டீத்தூள் சேர்த்து கொதித்து வரும்போது அடுப்பை அணைத்து, பாத்திரத்தை மூடவும். 3 நிமிடம் கழித்து, வடிகட்டி, தேன் சேர்த்து கலக்கிக் குடிக்கவும்.

இதற்கு பால் தேவையில்லை. புத்துணர்ச்சி தரும் சுவையான டீ இது!

திடீர் பூண்டு மிளகாய்ப்பொடி

தேவையானவை: பூண்டுப் பல் - 5, மிளகாய்த்தூள் - 3 டேபிள்ஸ்பூன், நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.

30 days 30 Recepies in Tamil with Ginger and Garlic

செய்முறை: பூண்டை தோலுடன் நசுக்கி, மிளகாய்த்தூளுடன் சேர்த்துக் கலக்கவும். இதனுடன் உப்பு சேர்த்தால், திடீர் பூண்டு மிளகாய்பொடி ரெடி!

நல்லெண்ணெய் விட்டுக் கலந்து சூடான இட்லி, தோசைக்குத் தொட்டுக் கொள்ளலாம்

இஞ்சித் தொக்கு

தேவையானவை: இஞ்சி - கால் கிலோ, பூண்டுப் பல் - 20, காய்ந்த மிளகாய் (வறுத்து அரைக்க) - 15, புளி - எலுமிச்சம்பழம் அளவு, வெல்லம் - சிறு துண்டு, பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன், வெந்தயத்தூள் - ஒரு டீஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் (தாளிக்க) - 2, கறிவேப்பிலை. நல்லெண்ணெய் - கால் கப், உப்பு - தேவையான அளவு.

30 days 30 Recepies in Tamil with Ginger and Garlic

செய்முறை: இஞ்சியை சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு இஞ்சி, பூண்டு, காய்ந்த மிளகாயை நன்கு வறுக்கவும். அதனுடன் புளி, உப்பு சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் தாளித்து, அரைத்த விழுதைச் சேர்த்துக் கிளறவும். இத்துடன் பெருங்காயத்தூள், வெந்தயத்தூள், வெல்லம் சேர்க்கவும். எண்ணெய் மிதந்து வரும்வரை அடுப்பை 'சிம்’மில் வைத்து நன்கு வதக்கவும். ஆறியவுடன், எடுத்து பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளவும்.

இது, ஈரம் படாமல் இருக்கும் வரை கெட்டுப் போகாது! தயிர் சாதத்துக்கு சிறந்த காம்பினேஷன்

பூண்டு பால் கஞ்சி

தேவையானவை: புழுங்கல் அரிசி - ஒரு கப், பூண்டுப் பல் - 12, வெந்தயம், சீரகம் - தலா கால் டீஸ்பூன், சுக்கு, சித்தரத்தை - ஒரு சிறிய துண்டு, திப்பிலி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு,

30 days 30 Recepies in Tamil with Ginger and Garlic

செய்முறை: அரிசியை நன்கு கழுவி குக்கரில் போடவும். ஒரு கப் அரிசிக்கு மூன்றரை கப் தண்ணீர் ஊற்றவும். இதனுடன் உரித்த பூண்டு, சீரகம், வெந்தயம், உப்பு சேர்க்கவும். சுக்கு, சித்தரத்தை, திப்பிலியை ஒரு துணியில் கட்டி, குக்கரில் போடவும். கஞ்சி வெந்த பின்பு துணியை வெளியே எடுத்து விடவும். வெந்த கஞ்சியில் தேவைக்கேற்ப பால் சேர்த்துப் பரிமாறலாம்.

மழைக்காலத்துக்கேற்ற ஆரோக்கியமான கஞ்சி இது. சளி, இருமலைக் கட்டுப்படுத்தும்.

இஞ்சி முரப்பா

தேவையானவை: இஞ்சி - கால் கிலோ, வெல்லம் - கால் கிலோ.

30 days 30 Recepies in Tamil with Ginger and Garlic

செய்முறை: இஞ்சியை நறுக்கி மிக்ஸியில் அரைத்து சாறெடுத்துக் கொள்ளவும். வெல்லத்தை தண்ணீரில் கரைத்து வடிகட்டி, கொதிக்க விடவும். இதனுடன் தெளிந்த இஞ்சிச் சாற்றை சேர்த்து, தொடர்ந்து கிளறவும். ஒட்டாமல், அல்வா பதத்துக்கு வரும்போது இறக்கித் தட்டில் கொட்டி, ஆற விட்டு வில்லைகளாகப் போடவும்.

வெல்லத்துக்குப் பதில் சர்க்கரையிலும் செய்யலாம்.


பூண்டு-உளுந்து சாதம்

தேவையானவை: புழுங்கல் அரிசி - ஒரு கப், கறுப்பு முழு உளுந்து - அரை கப், சீரகம் - ஒரு டீஸ்பூன், பூண்டுப் பல் - 10, தேங்காய் துருவல் - கால் கப், உப்பு - தேவையான அளவு.

30 days 30 Recepies in Tamil with Ginger and Garlic

செய்முறை: வெறும் கடாயில் கறுப்பு உளுந்தை வாசனை வரும் வரை வறுக்கவும். உளுந்தை தோல் நீங்கிக் கழுவி, அரிசியுடன் சேர்த்து குக்கரில் போட்டு, தேவையான தண்ணீர் ஊற்றவும். இதனுடன் உப்பு, சீரகம், பூண்டு, தேங்காய் துருவல் சேர்த்துக் கலக்கவும். முதல் விசில் வந்ததும், அடுப்பை சிம்மில் வைத்து 15 நிமிடம் வேக வைத்தால், உளுந்து சாதம் ரெடி!

இதற்குத் தொட்டுக்கொள்ள எள்ளுத் துவையல் நல்ல காம்பினேஷன். இது இடுப்பு எலும்பை பலப்படுத்தும். வளரும் பெண் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.

தேன் இஞ்சி

தேவையானவை: இஞ்சித் துண்டுகள் - ஒரு கப், தேன் - கால் கப்.

30 days 30 Recepies in Tamil with Ginger and Garlic

செய்முறை: இஞ்சியை சுத்தம் செய்து, சிறு துண்டுகளாக்கி ஆவியில் வேக வைக்கவும். பிறகு ஈரம் போகும் வரை இஞ்சியை ஆற விட்டு, தேனில் போட்டு வைக்கவும். குழந்தைகளுக்கு இதனை தினமும் ஒரு துண்டு கொடுத்து வர... பசியின்மை, அஜீரணம் ஏற்படாது. ஈரத்துடன் இஞ்சியை தேனில் போடக்கூடாது.

பூண்டு-மஷ்ரூம் கிரேவி

தேவையானவை: பட்டன் காளான் - 100 கிராம், வெங்காயம், தக்காளி - தலா 1, பூண்டுப் பல் - 10, சோம்பு - கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன், தனியாத்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

30 days 30 Recepies in Tamil with Ginger and Garlic

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, சோம்பு தாளித்து, நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள் சேர்த்து மீண்டும் வதக்கவும். இதனுடன் சுத்தம் செய்த காளானை சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து வேக விடவும். சிறிது வெந்தவுடன், நசுக்கிய பூண்டைச் சேர்க்கவும். பிறகு, உப்பு சேர்க்கவும். கிரேவி பதத்துக்கு வந்ததும், நறுக்கிய கொத்தமல்லி தூவி இறக்கவும்.

இது, சப்பாத்தி, பூரி, வெஜிடபிள் ரைஸ§க்கு சிறந்த சைட் டிஷ்.


ஜிஞ்சர் ஃப்ரூட் பஞ்ச்

தேவையானவை: இஞ்சி - 8 அங்குலத் துண்டு, சர்க்கரை, எலுமிச்சைச் சாறு - தலா ஒரு கப், ஆரஞ்சு சாறு - 2 கப், இஞ்சி துருவல் - சிறிதளவு, குளிர்ந்த நீர் - 3 கப்.

30 days 30 Recepies in Tamil with Ginger and Garlic

செய்முறை: இஞ்சியைத் தட்டி, சர்க்கரை சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்க விடவும். கொதி வந்தவுடன், அடுப்பை 'சிம்’மில் வைத்து, மூடாமல் மேலும் 15 நிமிடம் கொதிக்க விடவும். பிறகு இறக்கி வடிகட்டி, ஆற விடவும். அதில் எலுமிச்சைச் சாறு, ஆரஞ்சு சாறு கலந்து குளிர்ந்த நீர் சேர்த்துக் கலக்கி டம்ளரில் ஊற்றி, மேலாக இஞ்சி துருவல் போட்டுக் கொடுக்கவும்.

பூண்டு-கடலைப்பருப்பு துவையல்

தேவையானவை: கடலைப்பருப்பு - கால் கப், காய்ந்த மிளகாய் - 6, பூண்டுப் பல் - 5, புளி - ஒரு சிறு நெல்லிகாய் அளவு, உப்பு - தேவையான அளவு.

30 days 30 Recepies in Tamil with Ginger and Garlic

செய்முறை: வெறும் கடாயில் கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், பூண்டு ஆகியவற்றை வறுக்கவும். இதனை ஆற வைத்து மிக்ஸியில் போட்டு புளி, உப்பு சேர்த்து அரைக்கவும்.

தயிர் சாதம், ரசம் சாதத்துக்கு தொட்டுக்கொள்ள ஏற்ற துவையல் இது.

ஜிஞ்சர் வெஜ் ஃப்ரை

தேவையானவை: துருவிய இஞ்சி - 2 டேபிள்ஸ்பூன், பட்டாணி - கால் கப், கேரட் - 1 (பொடியாக நறுக்கவும்), வெங்காயம் - 1, புருக்கோலி பூ - 1, சோள மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு,

30 days 30 Recepies in Tamil with Ginger and Garlic

செய்முறை: சோள மாவுடன் உப்பு, துருவிய இஞ்சி, ஒரு டீஸ்பூன் எண்ணெய், சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கலக்கவும். இந்தக் கலவையில் கேரட், பட்டாணி, உதிர்த்த புருக்கோலி பூ சேர்த்து கலக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். இதனுடன் காய்கறிக் கலவையைச் சேர்த்துக் கிளறவும். மிதமான தீயில் மூடி வைத்து வேக விடவும். வாசனை வந்ததும் இறக்கிப் பரிமாறவும்.

பூண்டு-காய்கறி சூப்

தேவையானவை: பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு (கலந்தது) - ஒரு கப், பூண்டுப் பல் - 6, மிளகு, சீரகத்தூள், வெண்ணெய் - தலா கால் டீஸ்பூன். உப்பு - தேவையான அளவு.

30 days 30 Recepies in Tamil with Ginger and Garlic

செய்முறை: கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கை இரண்டு கப் தண்ணீரில் வேக விடவும். வெந்தவுடன் நசுக்கிய பூண்டு, மிளகு, சீரகத்தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். 3-4 நிமிடங்கள் கழித்து, அடுப்பிலிருந்து இறக்கி வெண்ணெய் சேர்த்துப் பரிமாறவும்.


Read more...
0

30 Soup Recepies in Tamil


முழுமையான உற்சாகத்துக்கு

நீங்க அசத்தலா சமைச்சு, 'ஆஹா...ஓஹோ'னு மோதிரக்கையால உங்க வீட்டுல தங்கக் குட்டு வாங்கியிருப்பீங்க. இருந்தாலும் எப்பவாவது, 'டிஃபரன்ட்டா ஒரு சூப் வச்சுக் கொடேன்'னு உங்க ஆசை கணவரோ, பிள்ளைகளோ கேட்கிறப்ப 'திருதிரு துறுதுறு'னு முழிப்பீங்க.

'பஜ்ஜி, சொஜ்ஜி கேட்டா அஞ்சு நிமிஷத்துல வகை வகையா செஞ்சுடலாம்... என்கிட்ட போயி டிஃபரன்ட்டான சூப் கேட்டா என்ன செய்வேன்?'னு நீங்க கையைப் பிசைஞ்சு நிக்கக் கூடாது இல்லியா... அதுக்காகவே வித்தியாசமான டேஸ்ட்ல பல வகை சூப்களை தயாரிக்கக் கத்துக்கொடுத்து, உங்களை குஷிப்படுத்தறாங்க ரேவதி சண்முகம்.

''சூப் ஒரு மெயின் உணவு கிடையாது, ஆனா, பசியைத் தூண்டுற அபிடைஸர். அதாவது, சூப்பைக் குடிச்சுட்டுத்தான், சாப்பிட ஆரம்பிக்கணும்.

சூப் செய்யுறப்ப கார்ன்ஃப்ளாரை அப்படியே நேரடியா கலக்கக் கூடாது. தண்ணியிலயோ, பால்லயோ கரைச்சு விடணும். காய்கறியை அரைப் பதத்துக்குதான் வேக வைக்கணும். கொழகொழனு வேக வச்சா சூப்போட டேஸ்ட் மாறிடும். குழந்தைகளும் விரும்பி சாப்பிடமாட்டாங்க.

சில வகை சூப்புல பூண்டு பயன்படுத்தி இருப்போம். பூண்டு உபயோகிக்க விரும்பாதவங்க அதைத் தவிர்க்கலாம். அதேமாதிரி, பெரும்பாலான சூப்கள்ல மிளகுத்தூள் சேர்த்திருக்கோம். ஆனாலும், தேவைப்படறவங்க தனியாவும் மிளகுத்தூள் சேர்த்துக்கலாம்'' என்று சூப்பராக டிப்ஸ்களையும் தந்தார் ரேவதி சண்முகம்.

பொதுவா, குளிர்காலத்துல அதிகமா பசியெடுக்காது. அந்தச் சமயங்கள்ல சூடான சூப் வயித்துக்கு நல்லது. பசியையும் தூண்டும். அதனால வெரைட்டியான சூப்களை செய்து, இந்தக் குளிர்காலத்தை 'சூப்'பரா கொண்டாடுங்க!

தக்காளி சூப்

தேவையானவை: தக்காளி - 4, வெங்காயம் - 1, பீட்ரூட், கேரட், பீன்ஸ் - தலா 50 கிராம். பச்சை மிளகாய் - 1, இஞ்சி - ஒரு துண்டு, பூண்டு - 2 பல், புதினா - சிறிதளவு, நன்றாகக் கழுவிய கொத்தமல்லி வேர் - 3 துண்டு, மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், உப்பு, வெண்ணெய் - தேவை யான அளவு.



செய்முறை: தக்காளி, வெங்காயம், பீட்ரூட், கேரட்டை சிறு துண்டுகளாக நறுக்கவும். பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை நசுக்கவும். குக்கரில் வெண்ணெயைப் போட்டு உருக்கி, காய்கறிகளை சேர்த்து 5 நிமிடம் வதக்கவும். அதில் புதினா, கொத்தமல்லி வேர், மிளகுத்தூள், உப்பு, 5 கப் தண்ணீர் சேர்த்து 4-5 விசில் வந்ததும் இறக்கவும். ஆறியதும் திறந்து காய்கறிகளை வடிகட்டி, மிக்ஸியில் அரைக்கவும். அதை, வடிகட்டிய சூப்புடன் சேர்த்து மீண்டும் சூடுபடுத்தி பரிமாறவும்.

கேரட் சூப்

தேவையானவை: கேரட் - 2, வெங்காயம் - 1, பூண்டு - 2 பல், நன்றாகக் கழுவிய கொத்தமல்லி வேர் - ஒரு கைப்பிடி அளவு, மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், காய்ச்சி ஆற வைத்த பால் - அரை கப், பட்டை - ஒரு துண்டு, வெண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: கேரட்டை தோல் சீவி நறுக்கவும். வெங்காயம், பூண்டு இரண்டையும் தோலுரித்து நறுக்கவும். குக்கரில் வெண்ணெயைப் போட்டு உருக்கி... பட்டை, வெங்காயம், பூண்டு சேர்த்து 3 நிமிடம் வதக்கி, கேரட்டை சேர்க்கவும். 2 நிமிடம் வதக்கியதும், கொத்தமல்லி வேர், 4 கப் தண்ணீர், உப்பு சேர்த்து 3 விசில் வந்ததும் இறக்கவும். ஆறியதும் வடிகட்டி பட்டை, கொத்தமல்லி வேரை தனியே எடுத்துவிட்டு, மீதமுள்ளவற்றை அரைக்கவும். அரைத்ததை வடிகட்டிய நீரில் சேர்த்து, அதனுடன் பாலையும் சேர்த்து கொதிக்கவிடவும். பிறகு, மிளகுத்தூள் சேர்த்துப் பரிமாறவும்.

தக்காளி சூப்

தேவையானவை: வெங்காயம் - 2, தக்காளி - 4, தேங்காய்ப்பால் - அரை கப், நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், பூண்டு - 4 பல், சோம்பு - கால் டீஸ்பூன், தனியா - 2 டீஸ்பூன், மிளகு - ஒரு டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். வெறும் கடாயில் சோம்பு, தனியா, மிளகு, சீரகத்தை வறுத்துப் பொடித்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெயை விட்டு வெங்காயம், பூண்டு சேர்த்து 5 நிமிடம் வதக்கி, தக்காளி, உப்பு சேர்க்கவும். நான்கு கப் தண்ணீர் சேர்த்து தக்காளி கரையும் வரை வதக்கவும். தயாராக இருக்கும் பொடியைச் சேர்த்து, 4 விசில் வந்ததும் இறக்கவும். ஆறியதும் வடிகட்டி, அதில் தேங்காய்ப்பால், எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லி சேர்த்துப் பரிமாறவும்.

காய்கறி சூப்மி

தேவையானவை: அவரைக்காய் - 3, கொத்தவரங்காய் - 10, காராமணி - 6, புடலங்காய், முள்ளங்கி, பூசணி - சிறு துண்டுகள் (தலா ஒன்று), சீரகம் - அரை டீஸ்பூன், நறுக்கிய வெங்காயம் - 1, இஞ்சி-பூண்டு விழுது - ஒன்றரை டீஸ்பூன், தேங்காய்ப்பால் - அரை டீஸ்பூன், மிளகுத்தூள் - 1 டீஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, கார்ன்ஃப்ளார் - 2 டீஸ்பூன். நெய் அல்லது எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: காய்கறிகளைப் பொடியாக நறுக்கவும். கடாயில் நெய் (அ) எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து, வெங்காயத்தைப் போட்டு வதக்கி, காய்கறிகளைச் சேர்க்கவும். அதில் இஞ்சி - பூண்டு விழுதைப் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கி, 4 கப் தண்ணீர், உப்பு சேர்த்து வேக விடவும். கால் கப் தண்ணீரில் கார்ன்ஃப்ளாரை கரைத்து, அதனுடன் சேர்க்கவும். 2 நிமிடம் கொதித்ததும் இறக்கி மிளகுத்தூள், கொத்தமல்லி, தேங்காய்ப்பால் சேர்த்துப் பரிமாறவும்.

காய்கறி சூப்

தேவையானவை: பொடியாக நறுக்கிய கேரட், பீட்ரூட், முட்டைகோஸ், காலிஃப்ளவர் எல்லாம் சேர்த்து - 2 கப், நறுக்கிய வெங்காயம் - 1, கார்ன்ஃப்ளார் - ஒரு டேபிள்ஸ்பூன், சோயா சாஸ் - 2 டீஸ்பூன், வெங்காயத்தாள் - சிறிதளவு, சர்க்கரை - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, பூண்டு - 2 பல், எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: காய்ந்த மிளகாய், பூண்டு இரண்டையும் சேர்த்து விழுதாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, அரைத்த விழுதைச் சேர்த்து, பச்சை வாசனை போக வதக்கவும். அதில் வெங்காயம், காய்கறிகளைப் போட்டு 5 நிமிடம் நன்கு வதக்கி, 5 கப் தண்ணீர் விடவும். கொதிக்கும்போது சர்க்கரை, சோயா சாஸ், உப்பு, சேர்க்கவும். காய்கறி அரைப்பதம் வேகும் வரை வேக விடவும். கால் கப் தண்ணீரில் கார்ன்ஃப்ளாரைக் கரைத்து அதில் சேர்த்து, கொதித்ததும் வெங்காயத்தாள் சேர்த்துப் பரிமாறவும்.

காலிஃப்ளவர் சூப்

தேவையானவை: காலிஃப்ளவர் - 1 (சிறியது), வெங்காயம் - 1, தக்காளி - 3, துவரம்பருப்பு வேக வைத்த தண்ணீர் - 3 கப், காய்ச்சி ஆற வைத்த பால் - அரை கப், பூண்டு (நசுக்கியது) - 8 பல், சோம்பு - கால் டீஸ்பூன், மிளகு - ஒரு டீஸ்பூன், பட்டை - ஒரு துண்டு, லவங்கம் - 2. எண்ணெய் - 3 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: காலிஃப்ளவரை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக்கவும். பாதியளவு காலிஃப்ளவரை உப்பு போட்டு முக்கால் பதம் வேக வைத்து தனியே வைக்கவும். வெங்காயம், தக்காளியை நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு சோம்பு, மிளகு, பட்டை, லவங்கம் தாளிக்கவும். அதில் வெங்காயம், தக்காளி, மீதியிருக்கும் காலிஃப்ளவர், பூண்டு போட்டு நன்கு வதக்கி, பருப்புத் தண்ணீர், உப்புச் சேர்க்கவும். மிதமான தீயில் 10 நிமிடம் கொதிக்க விட்டு வடிகட்டவும். வடிகட்டிய நீரில், வேக வைத்த காலிஃப்ளவர் துண்டுகள், பால், மிளகுத்தூள் சேர்த்துப் பரிமாறவும்.

பாதாம் சூப்

தேவையானவை: காலிஃப்ளவர் துண்டுகள் - ஒரு கப், பாதாம் - 15, வெங்காயம் - 1, பூண்டு - 4 பல், மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், காய்ச்சி ஆற வைத்த பால் - ஒரு கப், வெண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன், பிரிஞ்சி இலை - ஒரு துண்டு, உப்பு - தேவையான அளவு.



செய்முறை: கொதிக்கும் நீரில் பாதாம் பருப்புகளை 5 நிமிடம் ஊற வைத்து தோலுரிக்கவும். வெங்காயம், பூண்டு ஆகியவற்றைப் பொடியாக நறுக்கவும். கடாயில் வெண்ணெயை உருக்கி பிரிஞ்சி இலை, வெங்காயம், பூண்டு, காலிஃப்ளவர் போட்டு வதக்கி, 3 கப் தண்ணீர் சேர்க்கவும். அத்துடன் பாதாம் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும். ஆறியதும் வடிகட்டி, பிரிஞ்சி இலையை எடுத்துவிட்டு மீதமுள்ளவற்றை அரைக்கவும். கிடைக்கும் விழுதை வடிகட்டிய தண்ணீரில் போட்டுக் கொதித்ததும், பால், உப்பு, மிளகுத்தூள் சேர்த்துப் பரிமாறவும்.

மஷ்ரூம் சூப்

தேவையானவை: மஷ்ரூம் - 12, வெங்காயம், உருளைக்கிழங்கு - தலா 1, பூண்டு - 4 பல், மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், காய்ச்சி ஆற வைத்த பால் - ஒரு கப். வெண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: மஷ்ரூமை கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். வெங்காயம், உருளைக்கிழங்கு, பூண்டை தோல் நீக்கி பொடியாக நறுக்கவும். குக்கரில் வெங்காயம், உருளைக்கிழங்கு, 8 மஷ்ரூம், 4 கப் தண்ணீர் சேர்த்து 3-4 விசில் வந்ததும் இறக்கவும். ஆறவிட்டு, வடிகட்டி மிக்ஸியில் அரைக்கவும். வடிகட்டிய தண்ணீருடன் அரைத்த விழுதைச் சேர்த்துக் கலக்கவும். மீதமுள்ள மஷ்ரூமை மெல்லியதாக நறுக்கவும். கடாயில் வெண்ணெய் விட்டு உருக்கி, பூண்டு போட்டு வதக்கி, அதில் மஷ்ரூம் சேர்த்து மேலும் வதக்கவும். அதில் சூப்பை சேர்த்து கூடவே பால், உப்பு, மிளகுத்தூள் சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க வைத்துப் பரிமாறவும்.

நூடுல்ஸ் சூப்

தேவையானவை: பொடியாக நறுக்கிய கேரட், முட்டைகோஸ், பீன்ஸ், காலிஃப்ளவர் எல்லாம் சேர்த்து - 2 கப், வேக வைத்த சைனீஸ் நூடுல்ஸ் - அரை கப், இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன், நறுக்கிய வெங்காயம் - 1, சோயா சாஸ் - 2 டீஸ்பூன், மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி, வெங்காயத்தாள் - சிறிதளவு, சர்க்கரை - அரை டீஸ்பூன், கார்ன்ஃப்ளார் - 2 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.



செய்முறை: பாத்திரத்தில் 4 கப் தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் காய்கறிகள், இஞ்சி-பூண்டு விழுது, வெங்காயம், சர்க்கரை, உப்பு, ஆகியவற்றைப் போட்டு, அரைப் பதம் வரை கொதிக்க விடவும். அரை கப் தண்ணீரில் கார்ன்ஃப்ளாரைக் கரைத்து அதில் சேர்த்து, ஒரு நிமிடம் கொதித்ததும் இறக்கிவிடவும். பிறகு, சோயா சாஸ், நூடுல்ஸ், மிளகுத்தூள், கொத்தமல்லி, வெங்காயத்தாள் சேர்த்துப் பரிமாறவும்.

பட்டாணி சூப்

தேவையானவை: பச்சைப் பட்டாணி - ஒரு கப், உருளைக்கிழங்கு - 1, புதினா - 15 இலைகள், கொத்தமல்லி - கைப்பிடி அளவு, இஞ்சி - ஒரு துண்டு, பச்சை மிளகாய் - 1, காய்ச்சி ஆற வைத்த பால் - அரை கப், வெண்ணெய் - 3 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: பட்டாணியைக் கைப்பிடியளவு தனியே வைக்கவும். உருளைக்கிழங்கை தோல் சீவி துண்டுகளாக்கவும். குக்கரில் 2 டீஸ்பூன் வெண்ணெய் விட்டு உருக்கி இஞ்சி, பச்சை மிளகாய், உருளைக்கிழங்கு மீதமுள்ள பட்டாணி, புதினா, கொத்தமல்லி போட்டு வதக்கி, 4 கப் தண்ணீர் சேர்த்து 4 விசில் வந்ததும் இறக்கவும். ஆறியதும் வடிகட்டி மிக்ஸியில் அரைக்கவும். வடிகட்டிய தண்ணீரில் அரைத்த விழுதைப் போட்டு, அதில் உப்பு, பால் சேர்த்துக் கொதிக்க விடவும். கடாயில் ஒரு டீஸ்பூன் வெண்ணெய் விட்டு உருக்கி தனியே எடுத்து வைத்த பட்டாணியைப் போட்டு வதக்கி (படபடவென இது பொரியும்) சூப்புடன் சேர்த்துப் பரிமாறவும்.

சன்னா சூப்

தேவையானவை: வெள்ளை சன்னா - அரை கப், வெங்காயம் - 1, தக்காளி - 4, பூண்டு - 5 பல், இஞ்சி - ஒரு துண்டு, மஞ்சள்தூள், சோம்பு, சீரகம் - தலா கால் டீஸ்பூன், கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

பொடிக்க: சோம்பு, சீரகம், தனியா, மிளகு - தலா அரை டீஸ்பூன். காய்ந்த மிளகாய் - 1 (எல்லாவற்றையும் வெறும் கடாயில் வறுத்துப் பொடித்துக் கொள்ளவும்).



தாளிக்க: எண்ணெய் - ஒரு டீஸ்பூன், பட்டை - ஒரு துண்டு.

செய்முறை: சன்னாவை 6-8 மணி நேரம் ஊற வைத்து, உப்பு சேர்த்து குக்கரில் வேக வைக்கவும். வெந்ததும் கொஞ்சம் தனியே எடுத்து வைக்கவும். அந்தத் தண்ணீரிலேயே, மீதமுள்ள சன்னாவுடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி, நசுக்கிய பூண்டு, இஞ்சி, சோம்பு, சீரகம், கொத்தமல்லி, கறிவேப்பிலை, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து 4-5 விசில் வரை வேக வைக்கவும். வெந்ததும் அரைத்து வடிகட்டினால் சூப் ரெடி. இதில் தயாராக இருக்கும் பொடி, எடுத்து வைத்த சன்னாவை சேர்த்துக் கொதிக்க விட்டு, பட்டையை எண்ணெயில் தாளித்துப் போட்டுப் பரிமாறவும்.

கடலைப்பருப்பு சூப்

தேவையானவை: கடலைப்பருப்பு - அரை கப், வெங்காயம் - 1, தக்காளி - 3, பூண்டு - 3 பல், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், நெய் - ஒரு டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: கடலைப்பருப்புடன் மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். பூண்டை நசுக்கவும். வேக வைத்த கடலைப்பருப்பில் பாதியளவு தனியே எடுத்து வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளி, மிளகாய்த்தூள், உப்பு, பூண்டு சேர்த்து நன்கு வதக்கி, மீதி கடலைப்பருப்பை சேர்க்கவும். அதில் 3 கப் தண்ணீர் சேர்த்து வெங்காயம் வேகும்வரை கொதிக்க விட்டு இறக்கி, ஆறியதும் அரைத்து வடிகட்டவும். எடுத்து வைத்துள்ள கடலைப்பருப்பை வடிகட்டிய சூப்பில் சேர்த்து, கொதிக்க விடவும். கடாயில் நெய் விட்டு சீரகம் தாளித்து அதில் கொட்டி, எலுமிச்சைச் சாறு, கறிவேப்பிலை, கொத்தமல்லி கலந்து பரிமாறவும்.

முட்டைகோஸ் சூப்

தேவையானவை: பொடியாக நறுக்கிய கோஸ் - 2 கப், வெள்ளை பூசணி (நறுக்கியது) - ஒரு கப், நறுக்கிய வெங்காயம் - 1, மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், காய்ச்சி ஆற வைத்த பால் - ஒரு கப், வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், மைதா - 2 டீஸ்பூன், பூண்டு - 5 பல், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: முட்டைகோஸ், பூசணி துண்டுகளை சுத்தம் செய்து கொள்ளவும். குக்கரில் கோஸ், பூசணி, வெங்காயம், 4 கப் தண்ணீர், உப்பு சேர்த்து 3 விசில் வந்ததும் இறக்கவும். ஆறியதும், வடிகட்டி அரைக்கவும். கடாயில் வெண்ணெயைப் போட்டு உருக்கி, பொடியாக நறுக்கிய பூண்டைப் போட்டு வதக்கி அதில் மைதா சேர்க்கவும். ஒரு நிமிடம் அதை வதக்கி, பாலை சிறிது சிறிதாக விட்டு கட்டித் தட்டாமல் கிளறி, கொதிக்கும்போது வடிகட்டி வைத்திருக்கும் சூப்பை சேர்க்கவும். மிளகுத்தூள் சேர்த்துப் பரிமாறவும்.

லெமன் சூப்

தேவையானவை: வேக வைத்த பருப்புத் தண்ணீர் - 3 கப், பச்சை மிளகாய் - 1, தக்காளிச் சாறு - அரை கப், எலுமிச்சைச் சாறு - ஒன்றரை டேபிள்ஸ்பூன், பாசுமதி அரிசி சாதம் - கால் கப். பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

தாளிக்க: நெய் - ஒரு டீஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன்.



பொடிக்க: துவரம்பருப்பு - ஒரு டீஸ்பூன், மிளகு - அரை டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், மிளகாய் - 1 (வெறும் கடாயில் வறுத்துப் பொடிக்கவும்).

செய்முறை: பருப்புத் தண்ணீருடன், தக்காளிச் சாறு, பெருங்காயத்தூள், உப்பு, பொடித்த பொடி, கீறிய பச்சை மிளகாய், அரை கப் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். கடாயில் நெய் விட்டு கடுகு தாளித்து, அதில் பருப்புத் தண்ணீர் கரைசலை சேர்த்துக் கொதிக்க வைக்கவும். நன்கு பொங்கி வரும்போது இறக்கி வடிகட்டி, அதில் எலுமிச்சைச் சாறு, பாசுமதி சாதம், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்துப் பரிமாறவும்.

பாகற்காய் சூப்

தேவையானவை: பொடியாக நறுக்கிய பாகற்காய் - ஒரு கப், சின்ன வெங்காயம் (நறுக்கியது) - அரை கப், பூண்டு - 6 பல், அரிசி கழுவிய நீர் - 3 கப், தேங்காய்ப்பால் - ஒரு கப், மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன். உப்பு - தேவையான அளவு.



செய்முறை: கடாயில் எண் ணெய் விட்டு பாகற்காயைப் போட்டு, மிதமான தீயில் 10 நிமிடம் வதக்கவும். அதனுடன் வெங்காயம், பூண்டு, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து 5 நிமிடம் நன்கு வதக்கவும். அதில் அரிசி கழுவிய நீரை விட்டு, 15 நிமிடம் கொதிக்க வைத்து, தேங்காய்ப்பால் சேர்த்துப் பரிமாறவும்.

தூதுவளை சூப்

தேவையானவை: தூதுவளைக் கீரை - ஒரு கப், வெங்காயம் - 1, பூண்டு - 5 பல், மிளகுத்தூள், சீரகத்தூள் - தலா அரை டீஸ்பூன், தேங்காய்ப்பால் - அரை கப், எண்ணெய் - 3 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: தூதுவளைக் கீரையை ஆய்ந்து சுத்தம் செய்யவும். வெங்காயம், பூண்டை தோலுரித்து நசுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், பூண்டு, தூதுவளைக் கீரையைப் போட்டு வதக்கி, 3 கப் தண்ணீர் விடவும். அதில் உப்பு சேர்த்து, நன்கு கொதிக்கவிட்டு, தூதுவளைக் கீரை வெந்ததும் இறக்கவும். மிளகுத்தூள், சீரகத்தூள், தேங்காய்ப்பால் சேர்த்துப் பரிமாறவும்.

பசலைக்கீரை சூப்

தேவையானவை: பசலைக்கீரை - ஒரு கட்டு, வெங்காயம் - 1, முளைப்பயறு - ஒரு கைப்பிடியளவு, பூண்டு - 4 பல், மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், காய்ச்சி ஆற வைத்த பால் - ஒரு கப், பூண்டு (நசுக்கி யது) - 4 பல், வெண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: பசலைக்கீரையை ஆய்ந்து சுத்தம் செய்து கொள்ளவும். வெங்காயத்தை நறுக்கவும். குக்கரில் கீரை, வெங்காயம், பயறைப் போட்டு, 3 கப் தண்ணீர் ஊற்றி, 2 விசில் வந்ததும் இறக்கவும். ஆறியதும், வடிகட்டி மிக்ஸியில் அரைத்து, அந்த விழுதை வடிகட்டிய சூப்பில் சேர்க்கவும். கடாயில் வெண்ணெயைப் போட்டு உருக்கி, பூண்டு போட்டு வதக்கி, சூப்புடன் சேர்த்து, உப்பு, மிளகுத்தூள், பால் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க வைத்து, இறக்கிப் பரிமாறவும்.

புதினா - வெங்காய சூப்

தேவையானவை: புதினா - அரைக் கட்டு, சின்ன வெங்காயம் (நறுக்கி யது) - அரை கப், தக்காளி - 3, பூண்டு - 5 பல், கொத்தமல்லி - ஒரு கைப் பிடியளவு, கார்ன்ஃப்ளார் - 2 டீஸ்பூன், காய்ச்சி ஆற வைத்த பால் - அரை கப், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்.



பொடிக்க: மிளகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன் (வெறும் கடாயில் வறுத்துப் பொடித்துக் கொள்ளவும்).

பொரிக்க: பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - கால் கப், எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன். (சிவக்கப் பொரித்துக் கொள்ளவும்)

செய்முறை: புதினா, கொத்தமல்லியை ஆய்ந்து தண்ணீரில் அலசவும். பூண்டை தோலுரிக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், பூண்டு, தக்காளி போட்டு நன்கு வதக்கி, புதினா, கொத்தமல்லி சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். அதில் 3 கப் தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைத்து வடிகட்டி அரைக்கவும். வடிகட்டிய தண்ணீருடன் அரைத்த விழுதைச் சேர்த்து கொதிக்கவிட்டு, பின்பு பாலில் கார்ன்ஃப்ளாரைக் கரைத்துச் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும். அதில் மிளகு-சீரகப்பொடி, உப்பு சேர்த்துக் கலக்கவும். சிவக்கப் பொரித்த சின்ன வெங்காயத்தை சூப்பின் மேல் தூவி பரிமாறவும்.

கலர்ஃபுல் கார்ன் சூப்

தேவையானவை: ஸ்வீட்கார்ன் - அரை கப், கேரட், குடமிளகாய், வெங்காயம் - தலா 1, கார்ன்ஃப்ளார் - 2 டீஸ்பூன், காய்ச்சி ஆற வைத்த பால் - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 2, வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: கேரட், வெங்காயம், குடமிளகாயை பொடியாக நறுக்கவும். கடாயில் வெண்ணெயைப் போட்டு உருக்கி, காய்கறிகளைப் போட்டு 2 நிமிடம் வதக்கவும். அதில் 3 கப் தண்ணீர், ஸ்வீட்கார்ன், உப்பு சேர்த்து காயை வேகவிடவும். வெறும் கடாயில் மிளகாயை வறுத்துப் பொடித்துச் சேர்க்கவும். பாலில் கார்ன்ஃப்ளாரை கரைத்து அதனுடன் சேர்க்கவும். நன்கு கொதித்ததும் கலந்து இறக்கிப் பரிமாறவும்.

வல்லாரை சூப்

தேவையானவை: வல்லாரைக்கீரை - ஒரு கப், சின்ன வெங்காயம் - 10, பூண்டு - 4 பல், தக்காளி - 3, மிளகு - ஒரு டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, வடித்த சாதம் - கால் கப், எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், நெய் அல்லது எண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன், உப்பு - தேவையான அளவு,



செய்முறை: கீரையை சுத்தம் செய்யவும் பூண்டு, வெங்காயத்தை தோலுரிக்கவும். தக்காளியை நறுக்கவும். கடாயில் நெய் (அ) எண்ணெய் விட்டு மிளகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து, வெங்காயம், பூண்டு, தக்காளி சேர்த்து நன்கு வதக்கி அதில் கீரையைப் போடவும். நன்கு வதங்கியதும் 3 கப் தண்ணீர் ஊற்றி வேக விடவும். வெந்ததும்... சாதம், உப்பு போட்டு கலந்து இறக்கவும். வடிகட்டி அரைக்கவும். வடிகட்டிய சூப்புடன் அரைத்த விழுதைச் சேர்த்து மீண்டும் வடிகட்டவும். பிறகு, கொத்தமல்லி, எலுமிச்சைச் சாறு கலந்து கொதிக்க விட்டுப் பரிமாறவும்.

தாய்லாந்து சூப்

தேவையானவை: காலிஃப்ளவர் துண்டுகள் - 10, மஷ்ரூம் - 6, பச்சை மிளகாய் - 2, லெமன் க்ராஸ் (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்)- ஒரு துண்டு, நாரத்தை இலை - 2, எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், கொத்தமல்லி வேர் - ஒரு கைப்பிடி அளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: பாத்திரத்தில் 4 கப் தண்ணீரைக் கொதிக்க விடவும். அதில் கழுவி நறுக்கிய காலிஃப்ளவர் துண்டுகள், மஷ்ரூம், சுத்தப்படுத்தி நசுக்கிய கொத்தமல்லி வேர், லெமன் க்ராஸ், பச்சை மிளகாய், இரண் டாகக் கிழித்த நாரத்தை இலை சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும். பிறகு உப்பு, எலுமிச்சைச் சாறு, எண்ணெய் சேர்த்து இறக்கிப் பரிமாறவும்.

முருங்கைக்காய் சூப்

தேவையானவை: முருங்கைக்காய் - 2, வெங்காயம் - 1, பூண்டு - 5 பல், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பாசுமதி அரிசி சாதம் - கால் கப், தேங்காய்ப்பால் - அரை கப், தனியா - 3 டீஸ்பூன், மிளகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: முருங்கைக்காயை வேக வைத்து உள்ளிருக்கும் சதையை வழித்தெடுத்து. வேக வைத்த தண்ணீரில் சேர்க்கவும். சாதத்தை மிக்ஸியில் அரைத்து அதில் சேர்க்கவும். வெங்காயம், பூண்டை தோலுரித்து பொடியாக நறுக்கவும். தனியா, மிளகு, சீரகத்தை தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு பூண்டைப் போட்டு, பொரிந்ததும் வெங்காயம் சேர்க்கவும். வதக்கிய வெங்காயத்துடன் தனியா-மிளகு-சீரகம் அரைத்த விழுது சேர்த்து வதக்கவும். அதில் 3 கப் தண்ணீர், மஞ்சள்தூள், உப்பு போட்டு, கொதிக்கும்போது அரைத்த சாதம், முருங்கை கலவையை தண்ணீருடன் சேர்த்து ஊற்றவும். நன்கு கொதித்ததும் இறக்கி தேங்காய்ப்பால் கலந்து பரிமாறவும்.

பெப்பர் சூப்

தேவையானவை: துவரம்பருப்பு - அரை கப், வெங்காயம் - 1, தக்காளி - 4, பச்சை மிளகாய் - 1, தனியாத்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, சில்லி சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன், கார்ன்ஃப்ளார் - ஒரு டேபிள்ஸ்பூன், பூண்டு - 5 பல், எண்ணெய் - ஒன்றரை டேபிள்ஸ்பூன். உப்பு - தேவையான அளவு.



செய்முறை: துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்துக் குழைய வேக வைக்கவும். தக்காளி, வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், பூண்டு, தக்காளி, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். நன்கு வதங்கியதும், வேக வைத்த துவரம்பருப்பு, தனியாத்தூள், கறிவேப்பிலை, உப்பு, 4 கப் தண்ணீர் சேர்த்து மீண்டும் நன்கு வேக விடவும். அதனை இறக்கி வடிகட்டி, அதில் மிளகுத்தூள், சாஸ் சேர்த்து கொதிக்க வைத்து, அரை கப் தண்ணீரில் கரைத்த கார்ன்ஃப்ளாரை கலந்து கொதிக்க விட்டு இறக்கவும்.

ராஜ்மா சூப்

தேவையானவை: ராஜ்மா பீன்ஸ்- ஒரு கப், வெங்காயம் - 1, தக்காளி - 3, பூண்டு - 5, மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, பட்டை - ஒரு துண்டு, எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், கரம் மசாலா - ஒரு சிட்டிகை, வெண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: ராஜ்மாவை 6-8 மணி நேரம் ஊற வைக்கவும். குக்கரில் ராஜ்மாவுடன் உப்புச் சேர்த்து 5-6 விசில் வந்ததும் இறக்கவும். பாதியளவு ராஜ்மாவை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். கடாயில் வெண்ணெ யைப் போட்டு உருக்கி, பட்டை சேர்த்து, நறுக்கிய வெங்காயம், நசுக்கிய பூண்டு சேர்த்து 3 நிமிடம் வதக்கவும். அதில் நறுக்கிய தக்காளி, மிளகாய்த் தூள், உப்புச் சேர்த்து தக்காளி நன்கு கரையும் வரை வதக்கவும். அதனுடன் பாதியளவு ராஜ்மா மற்றும் அதை வேக வைத்த தண்ணீர் ஆகிய வற்றைச் சேர்த்து நன்றாக கொதிக்க விட்டு இறக்கவும். ஆறியவுடன், பட்டையை நீக்கி மீதமுள்ள கலவையை மிக்ஸியில் அரைத்து, தனியாக எடுத்து வைத்த ராஜ்மா, உப்பு சேர்க்கவும். வேக வைத்த தண்ணீர் குறைவாக இருந்தால் 3 கப் தண்ணீர் செர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும். பிறகு, கொத்தமல்லி, கரம் மசாலா, எலுமிச்சைச் சாறு, சேர்த்து இறக்கிப் பரிமாறவும்.

சீஸ் சூப்

தேவையானவை: உருளைக்கிழங்கு - 3, வெங்காயம் - 1, காய்ச்சி ஆற வைத்த பால் - 2 கப், பிரிஞ்சி இலை - ஒரு துண்டு, பூண்டு - 4 பல், மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், சீஸ் துருவல் - கால் கப், வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன். உப்பு - தேவையான அளவு.



செய்முறை: வெங்காயத்தை நறுக்கவும், உருளைக்கிழங்கைத் தோல் சீவி துண்டுகளாக்கவும். இரண்டையும் குக்கரில் 2 கப் தண்ணீர் விட்டு வேக வைத்து இறக்கவும். ஆறியதும், வடிகட்டி மிக்ஸியில் அரைக்கவும். கடாயில் வெண்ணெயைப் போட்டு உருக்கி, பிரிஞ்சி இலை, பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கி, அரைத்த கலவையை சேர்க்கவும். அதனுடன் வடிகட்டிய சூப், பால், உப்பு, மிளகுத்தூள் சேர்த்து, கொதித்ததும் இறக்கி, சீஸ் துருவல் சேர்த்துப் பரிமாறவும்.

அகத்திக்கீரை சூப்

தேவையானவை: அகத்திக்கீரை - 2 கப், பாசிப்பருப்பு - கால் கப், வெங்காயம் - 1, தக்காளி - 2, பச்சை மிளகாய் - 1, இஞ்சி - ஒரு துண்டு, எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், பூண்டு - 3 பல், சோம்பு - ஒரு சிட்டிகை, மிளகு, சீரகம் - தலா கால் டீஸ்பூன், கொத்தமல்லி - ஒரு கைப்பிடியளவு, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், தேங்காய்ப்பால் - அரை கப், கறிவேப்பிலை - சிறிதளவு. உப்பு - தேவையான அளவு. நெய் - 2 டீஸ்பூன் (தேவைப்பட்டால் சேர்க்கலாம்).



செய்முறை: அகத்திக்கீரையை சுத்தம் செய்யவும். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். இஞ்சி, பூண்டு இரண்டையும் நசுக்கவும். குக்கரில் தேங்காய்ப்பால், எலுமிச்சைச் சாறு நீங்கலாக மற்ற பொருட்களை ஒன்றாகப் போட்டு, 4 கப் தண்ணீர் ஊற்றி 4-5 விசில் வந்ததும் இறக்கவும். ஆறியதும் வடிகட்டி அரைக்கவும். மீண்டும் வடிகட்டவும். அதை 2 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கி தேங்காய்ப்பால், எலுமிச்சைச் சாறு, நெய் சேர்த்துப் பரிமாறவும்.

மக்ரோனி சூப்

தேவையானவை: மக்ரோனி (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) - ஒரு கப், வெங்காயம் - 1, தக்காளி - 3, மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், காய்ச்சி ஆற வைத்த பால் - 3 கப், மைதா - 3 டீஸ்பூன், சீஸ் துருவல் - கால் கப். வெண்ணெய் - 3 டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: 4 கப் கொதிக்கும் நீரில் மக்ரோனியை சேர்த்து மிதமான தீயில் நன்கு வேக விடவும். வெந்ததும் வடிகட்டி அலசி வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு, 3 கப் தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் வேக விட்டு இறக்கி, ஆற வைத்து, மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும். கடாயில் வெண்ணெயைப் போட்டு உருக்கி, மைதா சேர்த்து மிதமான தீயில் வறுத்து, பாலை கொஞ்சம் கொஞ்சமாக விட்டுக் கட்டியில்லாமல் கிளறவும். அதில் தக்காளி - வெங்காய கலவையைப் போட்டு, மக்ரோனி, சீஸ், உப்பு, மிளகுத்தூள் சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும்.

பேபிகார்ன் சூப்

தேவையானவை: பேபிகார்ன் - 5, மசூர் பருப்பு - அரை கப், வெங்காயம் - 1, தக்காளி - 2, பட்டை - ஒரு துண்டு, லவங்கம் - 2, கொத்தமல்லி - சிறிதளவு, எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், நெய் அல்லது எண்ணெய் - 3 டீஸ்பூன். உப்பு - தேவையான அளவு.



செய்முறை: பேபிகார்னை மெல்லியதாக நறுக்கவும். பருப்பைக் குழைய வேக வைக்கவும். வெங்காயம், தக்காளியை நறுக்கவும். கடாயில் நெய் (அ) எண்ணெய் விட்டு பட்டை, லவங்கம் தாளித்து, வெங்காயம், தக்காளி, பேபிகார்ன் போட்டு இரண்டு நிமிடம் வதக்கி, அதில் 3 கப் தண்ணீர் சேர்க்கவும். அதனுடன் வேக வைத்த பருப்பு, கொத்தமல்லி சேர்த்து 5 நிமிடம் நன்கு கொதிக்க விடவும். உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்துப் பரிமாறவும்.

பீர்க்கங்காய் சூப்

தேவையானவை: பீர்க்கங்காய் - கால் கிலோ, வெங்காயம், பச்சை மிளகாய், வெங்காயத்தாள் - தலா 1, சோயா சாஸ் - 2 டீஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, நல்லெண்ணெய் - அரை டீஸ்பூன், சர்க்கரை - அரை டீஸ்பூன். உப்பு - தேவையான அளவு,



செய்முறை: பீர்க்கங்காயை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கவும். வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். பாத்திரத்தில் 4 கப் தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் நறுக்கிய காய்களைப் போட்டு 5 நிமிடம் கொதிக்க விடவும். அதனுடன் உப்பு, சர்க்கரை, சோயா சாஸ், கொத்தமல்லி, நல்லெண்ணெய் சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க வைத்து, பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் தூவி பரிமாறவும்.

புரோக்கோலி சூப்

தேவையானவை: புரோக்கோலி (காலிஃப்ளவர் போன்றதொரு பூ வகை காய்), உருளைக்கிழங்கு, வெங்காயம் - தலா 1, காய்ச்சி ஆற வைத்த பால் - ஒரு கப், மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், சீவிய பாதாம் - ஒரு டேபிள்ஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, வெண்ணெய் - 2 டீஸ்பூன். உப்பு - தேவையான அளவு.



செய்முறை: புரோக்கோலியை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கவும். வெங்காயம், உருளைக்கிழங்கை தோல் நீக்கி துண்டுகளாக்கவும். குக்கரில் 2 கப் தண்ணீரில் வெங்காயம், உருளைக்கிழங்கைப் போட்டு 2 விசில் வந்ததும் இறக்கவும். ஆறியதும் அதில் புரோக்கோலி சேர்த்து மீண்டும் 3 நிமிடம் கொதிக்க வைக்கவும். வெந்ததும் இறக்கி, பாதியளவு புரோக்கோலி துண்டுகளை தனியே வைக்கவும். மீதமுள்ளவற்றை ஆறவிட்டு, நன்கு மிக்ஸியில் அரைத்து வடிகட்டி, அதில் பால் சேர்த்துக் கொதிக்க விட்டு இறக்கவும். கடாயில் வெண்ணெயைப் போட்டு உருக்கி பாதாமை சிவக்க வறுத்து, சூப்புடன் பாதாம், எடுத்து வைத்துள்ள புரோக்கோலித் துண்டுகள், உப்பு, மிளகுத்தூள், கொத்தமல்லி கலந்து பரிமாறவும்.


Read more...